தீப்பற்றி எரியும் மிக்-29 போர் விமானம்  
இந்தியா

ஆக்ரா அருகே மிக்-29 போர் விமானம் விபத்து!

ஆக்ரா அருகே இந்திய விமானப் படையின் மிக்-29 போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.

DIN

உத்தர பிரதேசம் ஆக்ரா அருகே இந்திய விமானப் படையின் மிக்-29 போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார்.

ரஷிய தயாரிப்பு மிக் 29 ரக விமானங்கள் விமானப் படையில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே சோங்கா கிராமத்தில் மிக் 29 ரக போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.

அப்போது விமானி துரிதமாக செயல்பட்டு பாராசூட் மூலமாக உயிர் தப்பினார்.

முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் ராஜஸ்தான் பகுதியில் இதே மிக் 29 ரக விமானம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இரு மாதங்களில் நடக்கும் 2-வது விபத்து இதுவாகும்.

பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விமானம் ஆக்ரா அருகே தீப்பிடித்து எரிந்ததாகவும் இதில் விமானி உயிர் தப்பியதாகவும் மேலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை: புறநகர் ரயிலில் இருந்து விழுந்து 3 பயணிகள் காயம்

“உள்ளூரை அறிந்துகொள்ளவே சுற்றுலா”: கார்த்திக் முரளி

இஷான் கிஷன் சதம் விளாசி அதிரடி; நியூசிலாந்துக்கு 272 ரன்கள் இலக்கு!

எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயரா? மத்திய அரசு மறுப்பு!

42 பந்துகளில் சதம் விளாசி இஷான் கிஷன் அதிரடி!

SCROLL FOR NEXT