உச்சநீதிமன்றம் 
இந்தியா

பட்டாசுத் தடையை ஏன் முறையாக அமல்படுத்தவில்லை? - தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

பட்டாசுத் தடையை முறையாக அமல்படுத்தாத தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

DIN

பட்டாசுத் தடையை அமல்படுத்தாத தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தில்லியில் தீபாவளி உள்ளிட்ட தொடர் பண்டிகைகலையொட்டி வருகிற ஜன. 1, 2025 வரை பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான பட்டாசுகள் இருப்பு வைப்பது, விற்பது, பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் தீபாவளிக்கு மறுநாள்(நவ. 1) தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமானது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில், தில்லியில் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஏன் சரியாக அமல்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன் தில்லியில் காற்று மாசு குறித்து கவலை தெரிவித்துள்ளது.

தடையை ஏன் திறம்பட அமல்படுத்தவில்லை என்பதை ஒரு வாரத்தில் தெளிவுபடுத்துமாறு தில்லி அரசுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

பட்டாசுகளுக்குத் தடை என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை என ஊடகங்களில் பரவி வரும் செய்திகளைக் கவனித்த உச்ச நீதிமன்றம், தானாக முன்வந்து தில்லி அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT