முகப்பு
இந்தியா

சத் கொண்டாட்டத்துக்காக பூர்வாஞ்சல் மக்கள் தில்லியை விட்டுச் செல்ல வேண்டாம்: அதிஷி

சத் பூஜைக் கொண்டாட்டத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள்..

Updated On : 5 நவம்பர், 2024 at 11:03 AM
முதல்வரி அதிஷி
பகிர்:

மக்கள் சத் பூஜையைக் கொண்டாட்டத்துக்காக தில்லியை விட்டு செல்ல வேண்டியதில்லை என்பதை ஆம் ஆத்மி அரசு உறுதி செய்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் அதிஷி கூறுகையில்,

தில்லியில் இந்தாண்டு சத் பூஜைக் கொண்டாட்டத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகளைத் தயார்நிலையில் வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சி ஆட்சியிலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக, பூர்வாஞ்சலிய மக்கள் சத் பூஜைக் கொண்டாட நகரத்தை விட்டு வெளியேற வேண்டியதில்லை என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.

முன்னதாக தலைநகரில் சத் கொண்டாட்டத்துக்கு 60 நீர்நிலைகள் மட்டும் இருந்தன. ஆனால் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் தயாராகியுள்ளது.

சத் கொண்டாட்டங்களுக்காகத் தில்லி அரசு நவம்பர் 7ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்துள்ளது. பூர்வாஞ்சலிகள் விழாவைக் கொண்டாடும் வகையில், நகரம் முழுவதும் உள்ள அனைத்து முக்கிய நீர்நிலைகளிலும் தண்ணீர், கழிவறைகள், மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

சத் பூஜை சூரிய வழிபாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

பிகார், கிழக்கு உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் சத் பூஜை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பிகார், உ.பி.யைச் சேர்ந்த பூர்வாஞ்சலிகள் இந்த வழிபாடு மிகவும் பிரபலமானது.

சத் பூஜையின் முதல் நாளான இன்று ஏராளமான பக்தர்கள் யமுனை நதியில் மிதக்கும் நச்சு நுரையையும் பொருட்படுத்தாமல் சடங்குகளைச் செய்து புனித நீரில் நீராடி மகிழ்ந்தனர்.

அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தில்லியில் 30-40 சதவீத வாக்காளர்களை இந்த சமூகம் பிரதிநிதித்துவப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →