புது தில்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் (83) தனது ஓய்வு குறித்து சூசகமாக அறிவித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சரத் பவாரின் பதவிக் காலம் இன்னும் 18 மாதங்களில் நிறைவடையும் நிலையில், அதன்பிறகு தான் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் முதுபெரும் தலைவர் என்று புகழப்படும் சரத் பவார், கடந்த 1999ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். தற்போது மகாராஷ்டிரத்தில் நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலில் பவார் - பவார் இடையேதான் போட்டி என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க.. ஹீரோ என்ற வார்த்தையுடன் லாரன்ஸ் பிஷ்னோய் படம்
இந்த நிலையில், சரத் பவார் தனது ஓய்வு குறித்து சூசகமாக அறிவித்துள்ளார், அதில், நான் தற்போது ஆட்சியில் இல்லை. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவி நிறைவடையவிருக்கிறது. எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலிலும் நான் போட்டியிடப்போவதில்லை. நான் எங்கேனும் ஒரு இடத்தில் நிறுத்தித்தானே ஆக வேண்டும் என்று கூறியிருக்கும் முதுபெரும் தலைவர், என்னை நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினராக்கிய பாரமதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் மற்றும் உத்தவ் தரப்பின் சிவசேனை அணியுடன் இணைந்து போட்டியிடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.