அரவிந்த் கேஜரிவால் 
இந்தியா

மிகப்பெரிய பலம்.. கட்சித் தொண்டர்களுக்கு ஆம் ஆத்மி வெளியிட்ட விடியோ பதிவு!

ஆம் ஆத்மியின் மிகப்பெரிய பலம் கட்சித் தொண்டர்கள்..

DIN

கட்சியின் மிகப்பெரிய பலம் தொழிலாளர்கள்தான் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

தலைநகரில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தநிலையில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற ஆம் ஆத்மி கடுமையாக உழைத்து வருகிறது.

தில்லியின் கலால் கொள்கை முறைகேடு அமல்படுத்தியது தொடர்பாக நடைபெற்ற ஊழல் காரணமாக அமலாக்கத்துறை கேஜரிவாலை கைது செய்து, 5 மாதங்களுக்குப் பின்னர் விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, முதல்வராக இருந்த கேஜரிவால் பதவி விலகியதையடுத்து, அக்கட்சியின் அமைச்சராக இருந்த அதிஷி புதிய முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.

இதுதொடர்பாக கேஜரிவாலின் எக்ஸ் பதிவில் வெளியிட்ட விடியோ பதிவில்,

எளியவனுக்கு உதவுங்கள். நாட்டின் ஒரே நம்பிக்கை ஆம் ஆத்மி கட்சி. அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு கட்சித் தொண்டர்கள் அனைவரும் சொந்த வேலையை விட்டுவிட்டுத் தேர்தலுக்கு உழைக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான சக்திகள் சட்டப்பேரவைத் தேர்தலில் நம்மை முறியடிக்க எதையும் செய்வார்கள். ஆனால் அத்தனைய சக்திகளை வெற்றிபெற நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

உடல்நலம், கல்வி, சாலைகள் போன்றவற்றைப் பற்றிப் பேசும் இந்திய அரசியலில் ஆம் ஆத்மி ஒரு புதிய விடிவாக இருக்கும் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT