PTI
இந்தியா

இந்தியன் ஆயில் ஆலையில் தீ விபத்து! உயிரிழப்பு 2-ஆக உயர்வு

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து

DIN

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்(ஐஓசிஎல்) சுத்திகரிப்பு ஆலையில் திங்கள்கிழமை(நவ. 11) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் அமைந்துள்ள சுத்திகரிப்பு ஆலையில் திங்கள்கிழமை மாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில் உள்ள பென்ஸீன் சேமிப்பு தொட்டி வெடித்துச் சிதறியதே, தீ விபத்துக்கான காரணமாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மளமளவென பரவிய தீ அருகிலிருந்த பிற பகுதிகளிலும் பற்றிக் கொண்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நெடுநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்று(நவ. 12) அதிகாலை வரை தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்ததை காண முடிந்தது.

இந்த நிலையில், தீ விபத்தில் சிக்கி ஆலையில் இருந்த இரு பணியாளர்கள் உயிரிழந்தனர். இந்தியன் ஆயில் அதிகாரியொருவர் தீக்காயங்களுடன் மீட்கபட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

SCROLL FOR NEXT