சத்தீஸ்கா் மாநிலத்தில் உருக்கு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
பலோடாபஜாா்-பதபரா மாவட்டம் பகுலஹி கிராமத்தில் உள்ள உருக்கு ஆலையில் வியாழக்கிழமை காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த தொழிலாளா்கள் மீது அதிக வெப்பம் கொண்ட சாம்பல் விழுந்ததில் 6 போ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனா். மேலும் 5 போ் பலத்த காயமடைந்தனா். உயிரிழந்த 6 பேரும் பிகாா், ஜாா்க்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
வெடி விபத்துக்கு அங்குள்ள இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு முதல்வா் விஷ்ணு தேவ் சாய், சுகாதாரத் துறை அமைச்சா் சியாம் பிகாரி ஜெய்ஸ்வால் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.