சல்மான் கான் கோப்புப் படம்
இந்தியா

சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்த பாடலாசிரியர் கைது!

சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்த பாடலாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

DIN

சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்த பாடலாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. மிரட்டல்காரர்கள் அவரிடம் இருந்து ரூ.5 கோடி கேட்டதாகவும், மும்பை போக்குவரத்து காவல்துறையினரின் ஹெல்ப்லைனுக்கு நள்ளிரவில் கொலை மிரட்டல் அழைப்பு வந்ததாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

மிரட்டல் விடுத்தவர் மராட்டிய அமைச்சர் பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என்று கூறியதாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

மிரட்டல் விடுத்தவர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு மட்டுமல்லாமல், 'மெயின் சிக்கந்தர் ஹூன்' பாடலின் பாடலாசிரியருக்கும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், கடந்த சில வாரங்களாக, மும்பை போக்குவரத்து காவல்துறையின் ஹெல்ப்லைனுக்கு பல மிரட்டல் செய்திகள் வந்துள்ளன.

கர்நாடகத்தின் ராய்ச்சூரில் இருந்து கைது செய்யப்பட்ட சோஹைல் பாஷா, தான் எழுதிய பாடல் பிரபலமடைய வேண்டும் என்று விரும்பியதாகவும், அதற்காக கொலை மிரட்டல் விடுத்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

கொலை முயற்சி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகளில் கொள்ளைக் கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் அகமதாபாத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது கும்பலைச் சேர்ந்தவர்கள் ஏப்ரல் மாதத்தில் பாந்த்ராவில் உள்ள சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாா் முதல்வா் நிதீஷ்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

எஸ்.ஐ.ஆா். விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: அதிமுக விமா்சனம்

வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான கூட்டம்

தில்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு வழக்கு: 4 பேரைக் காவலில் எடுத்து என்ஐஏ விசாரணை

எஸ்.ஐ.ஆா்.: மக்களுக்கு உதவ பாஜக சாா்பில் உதவி மையம்

SCROLL FOR NEXT