மகாராஷ்டிரத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் என மக்கள் நம்புவதாக தாராவியில் பிரசாரம் மேற்கொண்ட விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற நவ. 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
அங்கு பாஜக கூட்டணிக்கும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்- சிவசேனை(யுபிடி) கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி கைக்வாட் யாதவுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிரசாரத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்தும் அவருடன் பிரசாரம் செய்தார்.
இதையும் படிக்க | பெண்களின் திருமண வயது 21? - நவ.22-ல் நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை!
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன்,
'மகாராஷ்டிரத்தில் மீண்டும் பாஜக வந்துவிடக் கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
இந்த முறை மகா விகாஸ் அகாதி பெருவாரியான தொகுதிகளைப் பெற்று வெற்றி பெறும். தாராவி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜோதி கைக்வாட் பெருவாரியாக வாக்குகளை பெறுவார்
இந்த தேர்தல் தேசிய அளவில் உற்றுநோக்கப்படுகிறது. இந்திய கூட்டணியின் வலிமைக்கும் பாஜகவின் சதி அரசியலுக்கும் இடையே உள்ள யுத்தமாகத்தான் பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பலம் நாளுக்குநாள் வலுப்பெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியா கூட்டணியும் வலுப்பெற்று வருகிறது.
மகாராஷ்டிரத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் என்று மக்கள் நம்புகிறார்கள்' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.