திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஹதராபாத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வர பக்தர் ஒருவர், 15 மின் இருசக்கர வாகனங்களை வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கினார்.
அப்போது வாகனங்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அலுவலர் சி.வெங்கையா சௌத்ரி பங்கேற்றார்.
கோவில் வளாகத்தில் நடந்த இந்நிகழ்வில் பக்தர் வெங்கட நாகராஜு, கோவில் அதிகாரியிடம் அவற்றிற்கான சாவிகளை வழங்கினார். நன்கொடையாக வழங்கப்பட்ட 15 இரு சக்கர வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ. 22 லட்சம் ஆகும்.
இந்த வாகனங்கள் கோவிலின் அன்றாட பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.