முகப்பு
இந்தியா

நாக்பூரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக கங்கனா ரோட் ஷோ

நாக்பூர் மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக கங்கனா ரணாவத் ரோட் ஷோ பிரசாரம் நடத்தினார்.

Updated On : 17 நவம்பர், 2024 at 9:22 AM
கங்கனா (கோப்புப்படம்)
பகிர்:

நாக்பூர் மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக கங்கனா ரணாவத் ரோட் ஷோ பிரசாரம் நடத்தினார்.

288 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தோ்தலில், ஆளும் கூட்டணியில் பாஜகவும் (148), எதிரணியில் காங்கிரஸும் (103) அதிக இடங்களில் போட்டியிடுகின்றன.

அதேநேரம், பெரும்பான்மைக்கு தேவையான (145) தொகுதிகளுக்கு மேல் பாஜக மட்டுமே போட்டியிடுகிறது. தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் இறுதி கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகை கஸ்தூரிக்கு நவ. 29 வரை நீதிமன்றக் காவல்!

இந்த நிலையில் நாக்பூர் மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரவின் தட்கேவுக்கு ஆதரவாக பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் ஞாயிற்றுக்கிழமை ரோட் ஷோ பிரசாரம் நடத்தினார்.

நகரின் பெங்காலி பஞ்சா பகுதியில் இருந்து ரோட் ஷோவை அவர் தொடங்கினார். மேலும் நாக்பூர் மேற்கு தொகுதியிலும் அவர் ரோட் ஷோ நடத்துகிறார். பிரவின் தட்கே, பாஜக நகரப் பிரிவின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →