பால் தாக்கரேவின் நினைவிடம். Kunal Patil
இந்தியா

பால் தாக்கரேவின் நினைவு நாள்: உத்தவ் தாக்கரே, அரசியல் தலைவர்கள் அஞ்சலி

சிவசேனை நிறுவனர் பால் தாக்கரேவின் 12வது நினைவு நாளையொட்டி மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

DIN

சிவசேனை நிறுவனர் பால் தாக்கரேவின் 12வது நினைவு நாளையொட்டி மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

இதையொட்டி மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள அவரது நினைவிடத்தில் சிவசேனை (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மனைவி ராஷ்மி தாக்கரே ஆகியோர் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இரண்டு போட்டி சேனை பிரிவுகளைச் சேர்ந்த பல உறுப்பினர்களும் பால் தாக்கரேவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவிடத்திற்குச் சென்றனர்.

இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இவைதவிர, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், என்சிபி (எஸ்பி) தலைவர் சரத் பவார், மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் மற்றும் சிவசேனை (யுபிடி) தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தங்களது எக்ஸ் தளத்தில் அஞ்சலி செலுத்தினர்.

சிவசேனை நிறுவனரும் உத்தவ் தாக்கரேவின் தந்தையுமான பால் தாக்கரே கடந்த 2012, நவம்பர் 12ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லமான 'மாதோஸ்ரீ'யில் காலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT