மணிப்பூர் ANI
இந்தியா

மணிப்பூர் வன்முறை: இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம்!

மணிப்பூர் வன்முறை தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறுவது பற்றி...

DIN

மணிப்பூர் தொடர் வன்முறை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு முதல்வர் பிரேன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதக் குழுக்களும் தாக்குதலில் ஈடுபடுவதால் உயிா்ச் சேதம் தொடா்கதையாக உள்ளது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.

இந்த நிலையில், மணிப்பூரில் தீவிரவாதிகளால் கடந்த வாரம் 6 போ் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கடந்த சனிக்கிழமை போராட்டங்கள் வெடித்தன. மணிப்பூா் அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏ-க்களின் வீடுகள் தாக்குதலுக்கு இலக்கானதால் பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், தலைநகர் இம்பாலில் இன்று மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக அரசுக்கு ஆதரவு வாபஸ்

மேகாலய முதல்வா் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி, மணிப்பூா் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது.

60 இடங்களைக் கொண்ட மணிப்பூா் சட்டப்பேரவையில் தேசிய மக்கள் கட்சிக்கு 7 எம்எல்ஏ-க்கள் உள்ளனா். ஆளும் பாஜக 32 எம்எல்ஏ-க்களுடன் தனிப்பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. நாகா மக்கள் முன்னணி (5), ஐக்கிய ஜனதா தளம் (6) கட்சிகளின் ஆதரவும் பாஜகவுக்கு இருப்பதால் ஆட்சிக்கு பாதிப்பில்லை. எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு 5 எம்எல்ஏ-க்களும், 3 சுயேச்சை எம்எல்ஏ-க்களும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இது புதுசு! உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலும் மோசடியா? எச்சரிக்கை!

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

SCROLL FOR NEXT