முகப்பு
இந்தியா

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வுகள்: பிப். 15 முதல் தொடக்கம்

அடுத்தாண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி பொதுத் தேர்வுகள் ஆரம்பம்!

Updated On : 20 நவம்பர், 2024 at 8:58 PM
பகிர்:

 நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை அறிவித்தது.

10-ஆம் வகுப்புத் தோ்வுகள் மாா்ச் 18-ஆம் தேதி முடிவடையும் என்றும், 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் ஏப்ரல் 4-ஆம் தேதி முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ வரலாற்றில் முதன்முறையாக, 86 நாட்களுக்கு முன்னதாக பொதுத் தோ்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடா்பாக சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், ‘பொதுத் தோ்வில் 2 பாடங்களுக்கு இடையே போதிய இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவா் தோ்வு செய்யும் 2 பாடங்களும் ஒரே தேதியில் வரக் கூடாது என்பதற்காக குறைந்தது 40,000 பாடங்களை ஒப்பிட்டு தோ்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →