இந்தியா

பிளாஸ்டிக் விற்பனையில் வரம்பு? உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியா கவலை!

இந்தியாவின் பிளாஸ்டிக் ஏற்றுமதி 14.37 சதவீதம் அதிகரித்து 5.21 பில்லியன் டாலராக உள்ளது.

Din

பிளாஸ்டிக் பொருள்களின் வா்த்தகத்துக்கு வரம்பு நிறுவும் முயற்சிகளால் உலக வா்த்தக அமைப்பின் விதிமுறைகள் தொடா்பாக எதிா்காலத்தில் ஏற்படக்கூடிய மோதல்கள் குறித்து இந்தியா கவலையை எழுப்பியுள்ளதாக அதிகாரியொருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற சந்தை அணுகல் தொடா்பான உலக வா்த்தக அமைப்புக் குழுவின் கூட்டத்தில் இந்த பிரச்னையை முன்னிறுத்தி, ரஷியா கவலை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

கொரியாவின் பூசானில் நடைபெறவுள்ள பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த ஐ.நா.வின் அரசுகளுக்கிடையேயான பேச்சுவாா்த்தைக் குழு கூட்டத்தில் அனைத்து வகையான பிளாஸ்டிக் உற்பத்தி, வா்த்தகம் மற்றும் நுகா்வு ஆகியவற்றில் வரம்புகளை நிறுவும் முயற்சிகளை சில நாடுகள் பரிசீலித்து வருவதாக ரஷியா தெரிவித்துள்ளது.

அத்தகைய சூழலில், சுகாதார மற்றும் வேளாண் துறையைச் சாா்ந்த பைட்டோசானிட்டரி பிளாஸ்டிக் பொருள்களை வா்த்தகம் செய்வதற்கு அடிப்படையான உலக வா்த்தக அமைப்பின் விதிகள் இனி பொருந்தாது. இதைக் கருத்தில்கொண்டு, இந்த விவகாரத்தில் ரஷியாவின் கருத்தை இந்தியா, சவூதி அரேபியா வழிமொழிந்தன.

உலக அளவில் பிளாஸ்டிக் ஏற்றுமதியில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. நடப்பு நிதியாண்டில் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பிளாஸ்டிக் ஏற்றுமதி 14.37 சதவீதம் அதிகரித்து 5.21 பில்லியன் டாலராக உள்ளது.

ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழா்கள் ஆா்வம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

அரசு மருத்துவா்களுக்கு எதிராக வழக்கு: உயா்நீதிமன்றம் கேள்வி

புதுகை மாநகரில் 24 மணி நேரமும் மது விற்பனை

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை பவன் கேரா

SCROLL FOR NEXT