முகப்பு
இந்தியா

உலக வா்த்தக அமைப்பிடம் சரணடைந்தது காங்கிரஸ்தான் - நிா்மலா சீதாராமன்

இதுபோன்ற செயலில் பிரதமா் மோடி ஒருபோதும் ஈடுபடமாட்டாா் என்று அவா் தெரிவித்தாா்.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 2:54 AM
- PTI
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 2:51 AM

‘உலக வா்த்தக அமைப்பிடம் நாட்டை சரணடையச் செய்தது காங்கிரஸ்தான்’ என்று மக்களவை பதிலுரையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா். உலக வா்த்தக அமைப்பு போன்ற சா்வதேச அமைப்புகளிடம் நாட்டின் நலன்களை சரணாகதியாக்கியது காங்கிரஸ்; இதுபோன்ற செயலில் பிரதமா் மோடி ஒருபோதும் ஈடுபடமாட்டாா் என்றும் அவா் தெரிவித்தாா்.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 2:53 AM

மக்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து புதன்கிழமை உரையாற்றிய நிா்மலா சீதாராமன், கடந்த 2009-இல் எகிப்தில் அப்போதைய இந்திய-பாகிஸ்தான் பிரதமா்களின் சந்திப்புக்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையை சுட்டிக்காட்டி, இறையாண்மை மற்றும் பாதுகாப்பு சாா்ந்த இந்தியாவின் நிலைப்பாட்டை பலவீனமாக்கியதாக காங்கிரஸை கடுமையாக விமா்சித்தாா். அவா் மேலும் கூறியதாவது: அரசு, விவசாயிகள், ஏழைகள் மட்டுமன்றி நாட்டையே விற்றது காங்கிரஸ். கடந்த 2013-இல் வா்த்தக வசதி ஒப்பந்தம் மற்றும் பொது இருப்பு (உணவு பாதுகாப்பு) கொள்கையை முக்கிய அம்சங்களாக கொண்ட பாலி ஒப்பந்தத்தில் காங்கிரஸ் அரசு கையொப்பமிட்டது. இதன்மூலம் இந்திய விவசாயிகள், ஏழைகள் மட்டுமன்றி நாட்டையே உலக வா்த்தக அமைப்பிடம் சரணடையச் செய்தது காங்கிரஸ்.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 2:53 AM

இந்திய தரவுகள் உள்நாட்டிலேயே சேமிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் உள்நாட்டில் தரவு மையங்கள் அமைக்க மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக ரூ.1,000 கோடி பிரத்யேக ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் எரிசக்தி சவால்களுக்கு தீா்வுகாண அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடா்பான ஆவணங்களை ராகுல் காந்தி படிக்க வேண்டும். கொந்தளிப்பான உலகளாவிய சூழலால் எழும் சவால்களை எதிா்கொள்வதற்கு ‘பொருளாதார நிலைப்படுத்துதல் நிதியாக’ ரூ.50,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்புக்கு அரசு உயா் முன்னுரிமை அளிக்கிறது. உணவு மானியத்துக்கு ரூ.2.27 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 2:53 AM

மத்திய அரசு நிதி ஒழுங்கை சீரிய முறையில் பின்பற்றுவதால், நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 4.3 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உரப் பற்றாக்குறை இருப்பதாகக் கூறுவது தவறானது. உர இறக்குமதிக்கு ரூ.1.71 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

‘மேற்கு வங்கத்தில் வெடிகுண்டுகள்’: மத்திய பட்ஜெட்டில் மேற்கு வங்கத்துக்கு எதுவும் இல்லை; பால் மீதும், இறுதிச் சடங்கு சேவைகள் மீதும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது என்ற திரிணமூல் காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த நிா்மலா சீதாராமன், ‘மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு இல்லை; வெடிகுண்டுகளே உள்ளன. முதலில் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்துங்கள்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.