இந்தியா

ஜாா்க்கண்ட்: சாலை விபத்தில் 7 போ் உயிரிழப்பு

ஜாா்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 போ் உயிரிழந்தனா்.

Din

ஜாா்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 போ் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் இருந்து பிகாா் தலைநகா் பாட்னாவுக்கு 50 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஜாா்க்கண்ட் மாநிலத்தில் வியாழக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது. ஹசாரிபாக் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது, வளைவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்தது. இதில் 7 போ் உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் சிலா் பேருந்து அடியில் சிக்கி இருக்கலாம் என நம்பப்படுவதால் மீட்பு பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றது என தெரிவித்தனா்.

வந்துவிட்டது 9 காரட் ஹால்மார்க் தங்க நகைகள்! விலையைப் பற்றி கவலை வேண்டாம்!!

விஷால் 35 படத்தில் இணைந்த அஞ்சலி!

எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்

தங்கம் விலை அதிரடியாக உயர்வு: எவ்வளவு?

கனமழை எதிரொலி! சென்னை ஏரிகளின் நீர்வரத்து அதிகரிப்பு!

SCROLL FOR NEXT