மணிப்பூர்(கோப்புப்படம்) PTI
இந்தியா

மணிப்பூரில் மேலும் 2 நாட்களுக்கு மொபைல் இணைய சேவை துண்டிப்பு!

மணிப்பூரில் 7 மாவட்டங்களில் மேலும் 2 நாள்களுக்கு மொபைல் இணைய சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

மணிப்பூரில் 7 மாவட்டங்களில் மேலும் 2 நாள்களுக்கு மொபைல் இணைய சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், கக்சிங், பிஷ்ணுபூர், தௌபால், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி ஆகிய மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் மணிப்பூரில் இணையதள சேவை கடந்த 16ஆம் தேதி தேதி முடக்கப்பட்டது. அதில் பிராட்பேண்ட் இணைய சேவை கடந்த நவம்பர் 19ஆம் தேதி மீண்டும் வழங்கப்பட்ட நிலையில் மொபைல் இணைய சேவைக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதக் குழுக்களும் தாக்குதலில் ஈடுபடுவதால் உயிா்ச் சேதம் தொடா்கதையாக உள்ளது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இதனிடையே மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் மாவட்டத்தில் குகி இனத்தைச் சேர்ந்த முதியவர்கள் இருவர் எரித்துக்கொல்லப்பட்டனர்.

அங்கிருந்த வீடுகளும் தீயிட்டு சூறையாடப்பட்டன. அதைத்தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் போராட்டக்காரர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மணிப்பூரில் தீவிரவாதிகளால் அண்மையில் 6 போ் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, போராட்டங்கள் வெடித்தன. மணிப்பூா் முதல்வரின் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கியதுடன், அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏ-க்களின் வீடுகளுக்கு தீ வைத்ததால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT