வாக்கு எண்ணிக்கையில் பணியாளர்கள் 
இந்தியா

ராஜஸ்தான் இடைத்தேர்தல்: சமநிலையாக செல்லும் முன்னிலை!

மொத்தம் 7 தொகுதிகளில் 3 கட்சிகளும் தலா 2 தொகுதிகள் வீதம் 6 தொகுதிகளும், ஒரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளரும் முன்னிலை

DIN

ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட 7 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தானில் 7 தொகுதிகளில் 5 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாலும், ராம்கர் மற்றும் சலும்பர் தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் காலமானதாலும், அந்த 7 தொகுதிகளிலும் நவ. 13 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

தியோலி-உன்னியாரா, கின்வ்ஸார், ராம்கர், தௌசா, சலும்பர், சோரசி, ஜுன்ஜுனு ஆகிய 7 தொகுதிகளிலும் சனிக்கிழமை (நவ. 23) காலை 8 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

காலை 10.30 மணி நிலவரப்படி

தியோலி-உன்னியாரா, கின்வ்ஸார் - பாஜக

ராம்கர், தவுசா - காங்கிரஸ்

சலும்பர், சோரசி - பாரத ஆதிவாசி கட்சி

ஜுன்ஜுனு - சுயேட்சை வேட்பாளர்

ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடைபெற்ற நவ. 13 ஆம் தேதியிலேயே மேற்கு வங்கத்தில் 6, அஸ்ஸாமில் 5, பிகாரில் 4, கா்நாடகத்தில் 3, மத்திய பிரதேசம், சிக்கிமில் தலா 2, கேரளம், சத்தீஸ்கா், மேகாலயம், குஜராத்தில் தலா ஒரு தொகுதி என 33 பேரவை தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.

மகாராஷ்டிரத்தில் உள்ள நாந்தேட் மக்களவை தொகுதிக்கும், உத்தர பிரதேசத்தில் 9, பஞ்சாபில் 4, உத்தரகண்ட் மற்றும் கேரளத்தில் தலா ஒரு தொகுதி என 15 பேரவை தொகுதிகளுக்கும் கடந்த நவம்பா் 20-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT