ராகுல் காந்தி PTI
இந்தியா

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை: ராகுல் காந்தி

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

DIN

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை. அதுபற்றி விரிவாக ஆராய்வோம். இந்தியா கூட்டணிக்கு மாபெரும் வெற்றி வழங்கிய ஜார்க்கண்ட் மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இந்த வெற்றிக்காக முதல்வர் ஹேமந்த் சோரன, அனைத்து காங்கிரஸ் மற்றும் ஜேஎம்எம் தொண்டர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆதரவளித்த அனைத்து வாக்காளர் சகோதர, சகோதரிகளுக்கு நன்றி. தேர்தலுக்காக உழைத்த கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. வயநாட்டில் உள்ள எனது குடும்பத்தினர் பிரியங்கா மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பிரியங்காவின் மீது வைத்துள்ள நம்பிக்கையால் பெருமை அடைகிறேன். வயநாட்டின் முன்னேற்றத்திற்காக பிரியங்கா கலங்கரை விளக்கம் போல் இருப்பார்.

நல்லாட்சிக்கு வெற்றி தந்த மகாராஷ்டிர மக்களுக்கு நன்றி- பிரதமர் மோடி

வயநாட்டை தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் பிரியங்கா காந்தி வழிநடத்துவார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விடவும் பாஜக தலைமையிலான கூட்டணி அசுர வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

அதேசமயம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி பாஜக தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ நடவடிக்கையில் 2 வீரர்கள் மாயம்! தேடுதல் பணிகள் தீவிரம்!

அமித் ஷாவை எப்போதும் நம்பாதீர்கள்: மோடியை எச்சரித்த மமதா!

இரவில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு விழா - புகைப்படங்கள்

இருமல் மருந்து விவகாரம்! வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா? உலக சுகாதார அமைப்பு கேள்வி

SCROLL FOR NEXT