முகப்பு
இந்தியா

வயநாடு தொகுதி வாக்கு எண்ணிக்கை: என்ன செய்துகொண்டிருந்தார் பிரியங்கா?

பிரியங்கா என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று கணவர ராபர்ட் வதேரா தகவல்.

Updated On : 23 நவம்பர், 2024 at 4:18 PM
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
பகிர்:

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் பிரியங்கா காந்தி என்ன செய்கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

வயநாடு மக்களவைத் தொகுதியில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி தனது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

இந்த நிலையில், அவரது கணவர் ராபர்ட் வதேரா செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் பிரியங்காவின் கடின உழைப்பை மதித்து வயநாடு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

Advertisement

வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மக்களவையில், மக்களின் குரலாக பிரியங்கா இருக்க வேண்டும் என்று எப்போதும் நான் விரும்பியிருக்கிறேன். அவர் வெற்றி வித்தியாசத்தில் சாதனை படைப்பார் என்றே எதிர்பார்க்கிறேன் என்றார்.

மேலும், வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில், பிரியங்கா என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று கேட்டதற்கு, அவர் வீட்டில் குழந்தைகளுடன் நேரம் செலவழித்தார், வழக்கம் போல புத்தகம் படித்தார். தேர்தல் முடிவை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதற்காக அவர் கடினமாக உழைத்துள்ளார். மக்களுக்காகவும் கடினமாக உழைப்பார் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.