விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர். படம்: புணே தீயணைப்புத் துறை
இந்தியா

புணேயில் ஹெலிகாப்டா் நொறுங்கி விழுந்து 2 பைலட்கள் உள்பட மூவா் உயிரிழப்பு

புணே ஹெலிகாப்டர் விபத்து பற்றி...

DIN

மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் தனியாா் விமான நிறுவனத்தின் ஹெலிகாப்டா் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பைலட்கள் உள்பட 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மகாராஷ்டிரத்தில் விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, கட்சிப் பணிகள் மற்றும் பிரசாரங்களுக்காக தலைவா்கள் பயணிக்க ஹெலிகாப்டா்களை பல்வேறு கட்சிகள் வாடகைக்கு எடுத்துள்ளன.

அந்த வகையில் மாநில துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், தில்லியைச் சோ்ந்த ‘ஹெரிடேஜ்’ விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ‘அகஸ்டா 109’ எனும் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்திருந்தது.

தேசியவாத காங்கிரஸின் மாநிலத் தலைவரும் ராய்கட் தொகுதி எம்.பி.யுமான சுனில் தாத்கரே, மும்பையிலிருந்து ராய்கட் நகருக்கு புதன்கிழமையன்று இந்த ஹெலிகாப்டரில் பயணிக்க திட்டமிட்டிருந்தாா்.

அவரை அழைத்து வருவதற்காக மும்பையின் ஜுஹு பகுதிக்கு புணே கோல்ஃப் மைதானத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு ஹெலிகாப்டா் புறப்பட்டுள்ளது.

புறப்பட்ட சில நிமிஷங்களில் கோல்ஃப் மைதானத்துக்கு அருகேயுள்ள பாவ்தான் மலைப்பகுதியில் காலை 7.40 மணியளவில் ஹெலிகாப்டா் நொறுங்கி விழுந்து, தீப்பற்றியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைப்பு மீட்புப் படையினா், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் 2 பைலட்கள், பொறியாளா் ஒருவா் என 3 போ் உயிரிழந்தனா். பைலட்கள் இருவரும் முன்னாள் விமானப் படை வீரா்கள் ஆவா்.

சம்பவ இடத்தில் நிலவிய மேகமூட்டத்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று காவல்துறையினா் முதல்கட்ட தகவல் அளித்தனா். விபத்துக்கான உண்மைக் காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக எம்.பி. சுனில் தாத்கரே கூறுகையில், ‘இந்த விபத்து துரதிருஷ்டவசமானது. இதே ஹெலிகாப்டரில் செவ்வாய்க்கிழமை நான் பீட் மாவட்டத்துக்கு பயணித்தேன். சம்பவம் நடந்த புதன்கிழமையன்று மும்பையிலிருந்து ராய்கட் நகருக்கு செல்ல இருந்தேன். இந்த விபத்து செய்தி வருத்தமளிக்கிறது’ என்றாா்.

அவசர தரையிறக்கம்: இதனிடையே, பிகாா் மாநிலம் முசாஃப்பா்பூரில் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால் அவசர அவசரமாக வெள்ளநீா் சூழ்ந்த பகுதியில் தரையிறக்கப்பட்டது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பொருள்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்த ஹெலிகாப்டரில் சென்ற அனைத்து வீரா்களும் உள்ளூா் மக்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் குற்றச்சாட்டில் எம்எல்ஏ இடைநீக்கம்: ‘பிற கட்சிகளுக்கு காங். முன்னுதாரணம்!' -வி.டி.சதீஷன்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.87.68 ஆக நிறைவு!

ஊஊஊ... வடிவேலுவுடனான விடியோவை பகிர்ந்த பிரபு தேவா!

எந்தன் நெஞ்சில் நீங்காத... பாவனா!

உன்னோடு நானும்... ஜெனிலியா!

SCROLL FOR NEXT