பிரசாரத்தில் மக்கள் கூட்டம் பிடிஐ
இந்தியா

ஹரியாணா தேர்தல்: பிரசாரம் நிறைவு!

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

DIN

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று (அக். 3) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு வருகிற அக். 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அக். 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஹரியாணாவில் 10 ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடியவுள்ளதால், அக். 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன.

ஹரியாணாவில் பாரதிய ஜனதாவும், ஆம் ஆத்மியும் தனித்துப் போட்டியிடுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஜனநாயக ஜனதா கட்சியும் ஆசாத் சமாஜ் கட்சியும் இணைந்தும், இந்திய தேசிய லோக் தளமும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன.

இதையும் படிக்க | ஹரியாணாவில் வெல்லப் போவது யார்? - தேர்தல் நிலவரம்!

பாஜக முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனியும், காங்கிரஸின் முதல்வர் வேட்பாளாராக பூபிந்தர் சிங் ஹுடாவும் களமிறங்கியுள்ளனர்.

இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 5 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.

இதனால் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படலாம் என கணிக்கப்படுகிறது. 10 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்ற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

திமுக முப்பெரும் விழா தொடங்கியது! கனிமொழிக்கு பெரியார் விருதை வழங்கினார் ஸ்டாலின்!

சவுதி அரேபியா சென்ற பாக். பிரதமர்! ஒரே வாரத்தில் 3வது முறையாக மத்திய கிழக்கு பயணம்!

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

SCROLL FOR NEXT