பிரதமர் மோடி வாழ்த்து 
இந்தியா

நவராத்திரி: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

நவராத்திரி விழா தொடங்கியுள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து..

பிடிஐ

நவராத்திரி விழா தொடங்கியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நவராத்திரி திருவிழா அக்.3(இன்று) தொடங்கி அக்.12-ம் தேதி தசராவுடன் நிறைவடைகின்றது.

இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

நவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த புனித திருவிழா சக்தி வழிபாட்டிற்கு உகந்ததாகும்.

இந்த திருவிழா நாட்டின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாள் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பால் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் ஒளியூட்டட்டும். ஜெய் மாதா.

நவராத்திரியின் முதல் நாளில் அன்னை ஷைலபுத்ரியை கூப்பிய கரங்களுடன் பிரார்த்தனை செய்கிறேன். அவள் அருளால் அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள். தேவியின் இந்த பிரார்த்தனை உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT