ஹிமாசலப் பிரதேசம் 
இந்தியா

வீட்டில் எத்தனை கழிப்பறைகள்? அதற்கேற்ப வரி!

வீட்டில் எத்தனை கழிப்பறைகள் இருக்கிறதோ அதற்கேற்ப வரி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

DIN

மலைப் பிரதேசமான ஹிமாசலப் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள், தங்கள் வீட்டில் எத்தனை கழிப்பறைகளை வைத்திருக்கிறார்களோ அதற்கேற்ப வரி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஹிமாசலப் பிரதேசத்தில், வரி வசூல் மூலம் நிலைமையை சீராக்க, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான அரசு அண்மையில் இது தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது.

கழிவுநீர் மற்றும் குடிநீர் தொடர்பான வரி வசூல் குறித்து மாநில அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வீட்டில் கட்டப்படும் ஒவ்வொரு கழிப்பறைக்கும் தலா ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் வரியுடன், கழிப்பறைக்கான கூடுதல் கட்டணமும் நீர்வளத் துறைக்கு செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அதில், நம்பவே முடியவில்லை, இது உண்மைதானா என! பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். ஆனால், காங்கிரஸ் ஆட்சி இங்கு கழிப்பறைகளுக்கு கட்டணம் வசூலித்துக்கொண்டிருக்கிறது. இது மிகவும் அவமானகரமானது என்று பதிவிட்டுள்ளார்.

இதுவரை ஹிமாசலப் பிரதேசத்தில் குடிநீர் வரி வசூலிக்கப்பட்டதில்லை, பாஜக ஆட்சிக்கு வந்தால், இலவச குடிநீர் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், தற்போது காங்கிரஸ் தலைமையிலான ஹிமாசலப் பிரதேச அரசு, ஒவ்வொரு குடிநீர் இணைப்புக்கும் ரூ.100 கட்டணமாக மாதந்தோறும் செலுத்த வேண்டும் என்றும், அக்டோபர் முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த படம் தனுஷுடன்தான்: மாரி செல்வராஜ்

பங்குச்சந்தை முதலீடு: அதிக லாபம் என்று சொன்னாலே நம்ப வேண்டாம்!!

மெஸ்ஸி மேஜிக், ஜோர்டி ஆல்பா ஓய்வு: இன்டர் மியாமி அபார வெற்றி!

உலகத்தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: முதல்வர் ஸ்டாலின்

பாலைவனம், சூரிய அஸ்தமனம், அமைதி... இனாயா சுல்தானா!

SCROLL FOR NEXT