ஹரியாணா, ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காலை 10 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஹரியாணாவில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சியின் இந்தியா கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
ஹரியாணா, ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.
காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன், ஹரியாணா, ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்ற நிலையில், 10 மணி நிலவரப்படி ஹரியாணாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள தகவலின்படி...
ஹரியாணா(மொத்தம் 89/90 இடங்கள்)
காங்கிரஸ் - 36
பாஜக - 38
இதர கட்சிகள் - 5
ஜம்மு - காஷ்மீர்(மொத்தம் 89/90 இடங்கள்)
இந்தியா கூட்டணி - 50
பாஜக - 22
மக்கள் ஜனநாயக கட்சி - 3
மக்கள் மாநாட்டுக் கட்சி - 3
இதர கட்சிகள் - 2
சுயேச்சை - 9
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.