முகப்பு
இந்தியா

தில்லியில் ரூ.2,000 கோடி கொக்கைன் பறிமுதல்: ஒரே வாரத்தில் 2-வது முறை!

தில்லியில் ரூ.2,000 கோடி கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 10 அக்டோபர் 2024, 8:37 pm IST
பகிர்:

மேற்கு தில்லியில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 200 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு தில்லியின் ரமேஷ் நகர் பகுதியில் தற்போது சோதனை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர். பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் போதைப் பொருள் தொடர்பான மேலும் விவரங்கள் விசாரணையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் தென்மேற்கு தில்லியின் மஹிபால்பூரில் இருந்து ரூ. 5,000 கோடி மதிப்பிலான 562 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு இது தொடர்புடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.