மும்பை : நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை மற்றும் நவராத்திரி கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்கும் நிலையில், மும்பையில் பெய்து வரும் மழை காரணமாக நவராத்திரி கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில், வியாழக்கிழமை இரவு முதல் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.
இந்த நிலையில், மும்பையில் வெள்ளிக்கிழமை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதேவேளையில், சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்று வானிலை அறிவித்திருந்த நிலையில், நேற்று இரவு பல இடங்களில் கனமழை பெய்தது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று நவராத்திரி பண்டிகை களைகட்டியிருக்கும் நிலையில் மக்கள் வெளியே செல்லவும், பொருள்களை வாங்கவும் மழை இடையூறாக மாறியிருக்கிறது.
பொதுவெளியில் இன்று நடைபெறவிருந்த கர்பா நிகழ்ச்சிகளும் திட்டமிட்டபடி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் மக்கள் முகங்கள் வாடியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.