இண்டிகோ விமானம் தாமதமானது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பையிலிருந்து புறப்படும் இண்டிகோ விமானம் 4 மணிநேரம் தாமதமானதாகவும், அது குறித்த இண்டிகோ விமான நிறுவனம் எந்தத் தகவலையும் முறையாக தெரிவிக்கவில்லை என்றும் நடிகை ஸ்ருதிஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நள்ளிரவு 12.24 மணி அளவில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “நான் எப்போதும் சாதாரணமாக குறை சொல்பவர் அல்ல. ஆனால், இண்டிகோ நிறுவனத்தினர் இன்று அதிகப்படியான குழப்பத்தை ஏற்படுத்திவிட்டனர். கடந்த 4 மணிநேரமாக எந்தவித தகவலும் கிடைக்காமல் நாங்கள் விமான நிலையத்தில் தவிக்கிறோம். உங்கள் பயணிகளுக்கு உதவ முன்வருவீர்களா?” எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்கு விளக்கமளித்து அவரது பதிவுக்கு பதிலளித்துள்ள இண்டிகோ நிறுவனம், “ விமானம் தாமதத்தால் ஏற்பட்ட சிரமம் குறித்து மனதளவில் வருந்துகிறோம். உங்களது சிரமங்களையும் நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். மும்பையில் வானிலை காரணமாக விமானம் தாமதமாகிவிட்டது. இம்மாதிரியானவை எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், வாடிக்கையாளருக்கு தேவையானதை செய்வோம்” எனவும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.