வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து இண்டிகோ விமானம் லக்னௌவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தலைநகர் தில்லியிலிருந்து 222 பயணிகளுடன் இண்டிகோ விமானம் மேற்கு வங்கத்தின் பாக்டோக்ராவுக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. அப்போது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் தகவல் கிடைத்தது.
அதனைத்தொடர்ந்து காலை 9.17 மணியளவில் விமானம் லக்னௌவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்திலிருந்து பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தரையிறக்கப்பட்ட விமானம் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு வெடிகுண்டு அகற்றும் குழுவினர், விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
முதற்கட்ட சோதனையின் போது, பாதுகாப்புப் படையினர் ஒரு டிஷ்யூ பேப்பரில் கையால் எழுதப்பட்ட குறிப்பைக் கண்டெடுத்தனர். அதில் விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என்று எழுதப்பட்டிருந்ததாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.