வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து குவைத்-தில்லி விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது.
குவைத்திலிருந்து தில்லிக்கு 180 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை காலை இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து விமானம் பாதுகாப்பாக அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், விமானத்திற்குள் கையால் எழுதப்பட்ட துண்டு குறிப்பை பயணி ஒருவர் கண்டுபிடித்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. அச்சுறுத்தல் குறித்து தகவல் கிடைத்ததும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்கு விமானி தகவல் அளித்தார்.
தரையிறங்கியதும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் விமானத்தை முழுமையாக சோதனை செய்தனர். ஆனால் இதுவரை, சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருளும் மீட்கப்படவில்லை. இறுதி அனுமதி கிடைத்த பிறகு விமானம் புறப்படும் என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.