236 பயணிகள் சென்ற நேபாளம் - துருக்கி விமானத்தில் தீ? கொல்கத்தாவில் தரையிறக்கம்!
நேபாளத்திலிருந்து துருக்கி நாட்டுக்குச் சென்ற விமானம் கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறித்து..
நேபாளத்திலிருந்து துருக்கி நாட்டுக்குச் சென்ற விமானம் கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து இன்று (பிப். 4) மதியம் 2.49 மணியளவில், தர்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரத்துக்கு 236 பயணிகளுடன் பயணம் மேற்கொண்டது.
இதனைத் தொடர்ந்து, புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், விமானத்தின் வலது என்ஜீனில் தீப்பற்றியிருக்கக் கூடும் என சந்தேகித்த விமானி உடனடியாக கொல்கத்தாவின் சுபாஷ் சந்திர போஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரினார்.
Advertisement
Advertisement
உடனடியாக அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, விமானத்தில் இருந்த 236 பயணிகள் மற்றும் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில்,, விமானத்தின் என்ஜீன்களில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பயணிகள் மற்றொரு விமானம் மூலம் பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து விமான நிறுவனத்தின் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
A flight from Nepal to Turkey has made an emergency landing in Kolkata.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.