குஜராத்தில் தனியார் நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள்.
குஜராத் மாநிலம், மெஹ்சனா மாவட்டத்தின் காடி தாலுகாவில் உள்ள ஜசல்புர் கிராமத்திற்கு அருகே தனியார் நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்தது.
பிற்பகல் 1.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் 9-10 பேர் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்தன. 19 வயது இளைஞன் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 6 பேர் பலியானார்கள்.

மேலும் சிக்கியவர்களை மீட்புக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.