கோப்புப்படம். 
இந்தியா

ஹரியாணா முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

ஜூலானாவில் உள்ள வாட்ஸ்அப் குழுவில் ஹரியானா முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

DIN

ஜூலானாவில் உள்ள வாட்ஸ்அப் குழுவில் ஹரியானா முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் ஜிந்த் மாவட்டத்தின் தேவேரார் கிராமத்தைச் சேர்ந்த அஜ்மீர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஜின்த் காவல்துறை கண்காணிப்பாளர் சுமித் குமார் கூறுகையில், அஜ்மீர், மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நாளான அக்டோபர் 8 ஆம் தேதி வாட்ஸ்அப் குழுவில் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

திருப்பதி பிரம்மோற்சவம்: இவ்வளவு லட்டுகள் விற்பனையா?

இந்த விவகாரம் காவல்துறையின் கவனத்திற்கு வந்தவுடன், வழக்குப் பதிவு செய்யப்பட்டு அஜ்மீர் கைது செய்யப்பட்டார் என்று அவர் தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற ஹரியாணா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத் ஜூலானா சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

அவரரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

SCROLL FOR NEXT