கோப்புப்படம். 
இந்தியா

எர்ணாகுளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வீட்டில் சடலமாக மீட்பு

எர்ணாகுளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

எர்ணாகுளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் சோட்டானிக்கரை பகுதியில் வீடு ஒன்றில் தம்பதி மற்றும் அவர்களது இரு குழந்தைகள் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர். இதுகுறித்து அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் 4 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கனமழை: மக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள் என்னென்ன?

12 வயது மகன் மற்றும் ஒன்பது வயது மகள் ஆகியோர் படுக்கையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர்களது பெற்றோர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.

நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், குழந்தைகளின் இறப்புக்கான சரியான சூழ்நிலையையும் காரணத்தையும் கண்டறிய முழுமையான விசாரணை அவசியம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இன்று காலை தம்பதியினர் தங்கள் பள்ளிகளுக்குச் செல்லத் தவறியதால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது. இறந்த தம்பதி இருவரும் பள்ளி ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

SCROLL FOR NEXT