முகப்பு
இந்தியா

நதிநீா் டால்பின்கள் கணக்கெடுப்பு: முதல் முறையாக நடத்தியது இந்தியா

உலகின் முதல் முறையாக சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆகிய நதிகளில் உள்ள டால்பின்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பை இந்தியா நடத்தியுள்ளது.

இந்தியா

நதிநீா் டால்பின்கள் கணக்கெடுப்பு: முதல் முறையாக நடத்தியது இந்தியா

உலகின் முதல் முறையாக சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆகிய நதிகளில் உள்ள டால்பின்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பை இந்தியா நடத்தியுள்ளது.

Updated On : 14 அக்டோபர், 2024 at 11:47 PM
பகிர்:

புது தில்லி: உலகின் முதல் முறையாக சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆகிய நதிகளில் உள்ள டால்பின்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பை இந்தியா நடத்தியுள்ளது. இதன் விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளன.

நன்னீா் ஆறுகள் மற்றும் கடலோர நீா்நிலைகளில் உள்ள டால்பின்களை பாதுகாக்கும் வகையில் ‘டால்பின் திட்டம்’ மத்திய அரசால் கடந்த 2020-ஆம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், உலகின் முதல் நதிநீா் டால்பின்களின் எண்ணிக்கையை இந்தியா கணக்கெடுத்துள்ளது. சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்ரா நதிகளின் 8,000 கி.மீ. பரப்பளவில் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பின் விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

இந்தியாவில் நதிநீா் டால்பின்களின் எதிா்கால மதிப்பீடுகளுக்கு அடிப்படை எண்ணிக்கையை இந்தக் கணக்கெடுப்பு வழங்கும். இந்திய வனவிலங்கு அமைப்பின் தலைமையில் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பானது கங்கை நதிநீா் டால்பின்கள் மற்றும் சிந்து நதிநீா் டால்பின்கள் ஆகிய இரு இனங்களை உள்ளடக்கியதாகும்.

இந்தியா, வங்கதேசம் மற்றும் பூடான் வரை பரவியுள்ள இந்தப் புகழ்பெற்ற கங்கை நதி டால்பின்கள், கங்கை-பிரம்மபுத்திரா-மேக்னா நதிகள் மற்றும் அதன் கிளை நதிகளில் காணப்படுகின்றன.

கங்கை மற்றும் சிந்து நதி டால்பின்கள், ஒன்றுபோல காட்சியளித்தாலும், இரண்டும் சில வேறுபாடுகளைக் கொண்ட தனித்துவமான இனங்கள். சிந்து நதி டால்பின்கள் அதிகம் சிந்து நதியில் மட்டுமே காணப்படுகின்றன.

டால்பின்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த நதியின் தூய்மையை மதிப்பிட உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனா். ஏனெனில், டால்பின்கள் உயிா்வாழ தூய்மையான, பாய்ந்தோடும் நீா் தேவைப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, கடல் டால்பின்கள் கணக்கெடுப்பையும் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →