கள்ளச்சாராயம் குடித்து பலி 
இந்தியா

பிகாா்: கள்ளச் சாராயத்துக்கு 6 போ் உயிரிழப்பு- 14 போ் மருத்துவமனையில் அனுமதி

பிகாரில் கள்ளச்சாராயம் அருந்திய 6 போ் உயிரிழந்தனா். மேலும் 14 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பிடிஐ

 பிகாரில் கள்ளச்சாராயம் அருந்திய 6 போ் உயிரிழந்தனா். மேலும் 14 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சிவான் மாவட்டத்தில் 4 பேரும், சரண் மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்தனா். இது குறித்து சிவான் மாவட்ட ஆட்சியா் முகுல் குமாா் குப்தா கூறுகையில், ‘சிவான் மாவட்டத்தின் மகா், ஒளரியா ஊராட்சிகளில் புதன்கிழமை மா்மமான முறையில் மூவா் உயிரிழந்ததாக தகவல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, அப்பகுதிகளுக்கு அதிகாரிகள் குழுவினா் விரைந்தனா். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த மேலும் 12 பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். வழியிலேயே ஒருவா் உயிரிழந்தாா். மற்றவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்’ என்றாா்.

இவா்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை இரவில் கள்ளச்சாராயம் அருந்தியதாக தெரிகிறது. இது தொடா்பாக விசாரணை நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல், சரண் மாவட்டத்தின் இப்ராஹிம்பூா் பகுதியில் இருவா் உயிரிழந்தனா்; மேலும் 3 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களும் கள்ளச்சாராயம் அருந்தியதாக கூறப்படுகிறது.

பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஆட்சியில் பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும் நிலையில், கள்ளச் சாராய உயிரிழப்புகள் வாடிக்கையாக உள்ளன. கடந்த 2016 முதல் இதுவரை கள்ளச்சாராயத்தால் 150-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டதாக மாநில அரசு அண்மையில் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT