ஜம்மு-காஷ்மீரின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு இணைந்து செயல்படும்: மோடி
மக்களுக்குச் சேவையாற்றும் அவரது முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்
ஜம்மு-காஷ்மீரின் முதல்வராகப் பதவியேற்றுள்ள ஒமர் அப்துல்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் பிரதேசத்தின் முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜம்மு-காஷ்மீர் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதையும் படிக்க: சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன்? பாலச்சந்திரன் விளக்கம்!
Advertisement
அவருடன் சுரீந்தர் சௌத்ரி, சகினா இடூ, ஜாவைத் அகமது ராணா, ஜாவைத் அகமத் தார் மற்றும் சதீஷ் சர்மா உள்ளிட்ட 5 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
ஜம்மு-காஷ்மீர் முதல்வராகப் பதவியேற்ற ஒமர் அப்துல்லாவுக்கு வாழ்த்துகள். அவருடனும் மற்றும் அவரது குழுவுடனும், அவரது மத்திய அரசு இணைந்து செயல்படும். மக்களுக்குச் சேவையாற்றும் அவரது முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
இதையும் படிக்க: சென்செக்ஸ் 319 புள்ளிகளுடனும், நிஃப்டி 86.05 புள்ளிகளுடன் சரிந்து நிறைவுற்ற பங்குச் சந்தை!
ஜம்மு-காஷ்மீரின் முன்னேற்றத்திற்காக ஒமர் அப்துல்லா மற்றும் அவரது குழுவினருடனும் மத்திய அரசு நெருக்கமாகப் பணியாற்றும் என்றும் அவர் உறுதியளித்தார்.
ஆட்சி அமைக்கும் முன் உறுதியளித்தபடி ஜம்மு பிரிவுக்கு உரிய பிரிதிநிதித்துவம் அளிக்க சுரீந்தர் சௌத்ரியை துணை முதல்வராக நியமிப்பதாக ஒமர் அப்துல்லா அறிவித்தார்.
மேலும், கடந்த 2009 முதல் 2015 வரை 6 ஆண்டு காலம் பணியாற்றிய அப்துல்லா, தற்போது மீண்டும் ஜம்மு-காஷ்மீரின 14 முதல்வராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.