கோப்புப்படம் 
இந்தியா

மும்பை விமான நிலையத்தில் 1.25 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

மும்பை விமான நிலையத்தில் துபையில் இருந்து வந்த பயணிகள் இருவரிடம் இருந்து ரூ.1.25 கோடி மதிப்பிலான 1.725 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள், இ- சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

DIN

மும்பை: மும்பை விமான நிலையத்தில் துபையில் இருந்து வந்த பயணிகள் இருவரிடம் இருந்து ரூ.1.25 கோடி மதிப்பிலான 1.725 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள், இ- சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மும்பைக்கு துபையிலிருந்து தங்கம் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருள்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், துபையிலிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்த சந்தேகத்துக்கிடமான 2 பயணிகளைப் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

மேலும், அவா்களின் உடைமைகளை சோதனை நடத்தியபோது, ரூ.1.02 கோடி மதிப்பிலான சுமார் 1.725 கிலோ எடையுள்ள மெழுகு வடிவில் மூன்று தங்க கட்டிகளை அவரது உடல் மற்றும் உள்ளாடையிலும் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

விசாரணையின் போது வேறொரு பயணி தன்னிடம் கொடுத்து எடுத்துவரச் சொன்னது தெரியவந்தது.

இதேபோல் துபையிலிருந்து வந்த மற்றொரு பயணி ஒருவரின் உடமைகளை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சோதித்தபோது, அவா் வைத்திருந்த பையில் இ-சிகரெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உரிய அனுமதியின்றி கொண்டு வந்த ரூ.9.43 லட்சம் மதிப்பிலான 200 இ- சிகரெட்டுகளை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனர்.

இருவரையும் சுங்கச் சட்டம் 1962ன் கீழ் சுங்கத் துறையினா் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக காவல்துறையைச் சேர்ந்த 3 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிப்பு!

நின்றுகொண்டிருந்த பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து! 3 பேர் பலி!

டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளித்த ஐசிசிக்கு நன்றி: ஸ்காட்லாந்து

திமுகவை வீழ்த்த உள்ள ஒரே தலைவர் விஜய்: செங்கோட்டையன்

சசிகுமார் நடிப்பில் திரைப்படமாகும் நாவல்!

SCROLL FOR NEXT