வால்மீகி கோயிலில் ராகுல் காந்தி X/Rahul Gandhi
இந்தியா

நீதிப் பாதையை மனிதகுலத்துக்கு காட்டியவர் மகரிஷி வால்மீகி! ராகுல் காந்தி

மகரிஷி வால்மீகி கோயிலுக்குச் சென்ற ராகுல் காந்தியின் புகைப்படங்கள்...

DIN

உண்மை மற்றும் நீதிக்கான பாதையை மனிதகுலத்துக்கு அன்புடன் எடுத்துக் காட்டியவர் மகரிஷி வால்மீகி என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

மகரிஷி வால்மீகியின் பிறந்த நாளையொட்டி, தில்லியில் உள்ள வால்மீகி கோயிலுக்குச் சென்று ராகுல் காந்தி இன்று தரிசனம் செய்தார்.

இந்த நிலையில், வால்மீகி கோயிலுக்குச் சென்ற புகைப்படங்களை பகிர்ந்து ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“ராமாயணக் காவியத்தைப் படைத்த ஆதி கவி மகரிஷி வால்மீகியின் பிறந்த நாளில் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று காலை தில்லியில் உள்ள வால்மீகி கோயிலுக்குச் சென்றேன். மகாத்மா காந்தி இந்த வளாகத்தில் நிறைய நேரம் செலவிட்டுள்ளார். நான் பாபு நிவாஸில் இன்று காலை சிறிது நேரம் தங்கியிருந்தேன்.

உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்துக்கான பாதையை அன்புடனும் கருணையுடனும் மனிதகுலத்துக்கு எடுத்துக் காட்டிய மகரிஷி வால்மீகிக்கு வணக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,020 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சூறைக்காற்று: ராமேசுவரத்தில் படகு உடைந்து சேதம்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு கா்நாடகம் வரவேற்பு

எடியூரப்பாவுக்கு எதிரான போக்ஸோ வழக்கை ரத்துசெய்ய கா்நாடக உயா்நீதிமன்றம் மறுப்பு

கொல்கத்தா டெஸ்ட் இன்று தொடக்கம்: தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து சவாலைச் சந்திக்கும் இந்தியா

SCROLL FOR NEXT