கோப்புப் படம் 
இந்தியா

ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகைக்கு ரூ. 5 லட்சம் தருவதாக பெண்ணிடம் மோசடி: 4 பேர் கைது!

மகாராஷ்டிரத்தில் பெண்ணை ஏமாற்றி நகையைப் பறித்த நால்வர் கைது

DIN

மகாராஷ்டிரத்தில் பெண்ணை ஏமாற்றி நகையைப் பறித்த நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் அக். 12 ஆம் தேதியில் காலையில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்த 59 வயதுடைய பெண் ஒருவரை 4 பேர் வழிமறித்துள்ளனர். பின்னர், அந்தப் பெண்ணிடம் ஒரு பையைக் கொடுத்து, அதில் ரூ. 5 லட்சம் இருப்பதாகக் கூறி, அதனை வைத்துக்கொண்டு, அதற்கு பதிலாக பெண்ணுடைய தங்கச் சங்கிலியை கேட்டுள்ளனர்.

அந்தப் பெண்ணும், தான் அணிந்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை அவர்களிடம் கொடுத்துவிட்டு, பையை வாங்கியுள்ளார். ஆனால், அந்தப் பையில் பணம் இல்லாததை அறிந்த அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இந்த மோசடியில் ஈடுபட்டவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இறுதியாக, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட நால்வரையும் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (அக். 18) கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்த 4.5 கிலோ அளவிலான சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பிலான தங்க ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்கள் நால்வரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இதுபோன்ற மோசடிகளில் ஏற்கெனவே ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT