கோப்புப் படம் 
இந்தியா

இலங்கை கடற்படை கைது செய்த 17 இந்திய மீனவர்கள் இந்தியா வருகை!

நடப்பாண்டில் மட்டும் 413 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது

DIN

இலங்கை கடற்படை கைது செய்த 17 இந்திய மீனவர்கள் இந்தியா திரும்பி விட்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இந்திய மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், 17 இந்திய மீனவர்களையும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இருநாட்டினரும் கவனக்குறைவாக கடல் எல்லையை மீறுவதாகக் கூறி, இருநாட்டு மீனவர்களும் அடிக்கடி கைது செய்யப்படுகிறார்கள். குறிப்பாக, இலங்கை கடற்பரப்பில் நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடுகூட சில சமயங்களில் நடத்துகின்றனர்.

இலங்கை கடற்படையின் அதிகாரபூர்வ வெளியீட்டின்படி, நடப்பாண்டில் மட்டும் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களின் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகரில் நாளை மின்தடை

முனைவா் பட்டம் பெற்ற பள்ளிக் கல்வி அமைச்சருக்கு காதா் மொகிதீன் வாழ்த்து

கரூா் மாவட்டத்தில் டிராகன் பழச்செடி விவசாயிகளுக்கு ரூ. 5 லட்சம் மானியம்!

பெரியாா் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் அா்ஜுன் சம்பத் ஆஜா்! இருதரப்பினரிடையே தள்ளு-முள்ளு!!

கரூா் சம்பவம்: தவெக பனையூா் அலுவலக உதவியாளா், 3 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

SCROLL FOR NEXT