கட்சிக் கொடிகளுக்கு அனுமதி Center-Center-Delhi
இந்தியா

பிரியங்காவின் பேரணியில் கட்சிக் கொடிகளுக்கு அனுமதி!

கட்சிக் கொடிகளைப் பயன்படுத்துவதில் எந்தத் தடையும் இல்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

பிடிஐ

வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் கட்சிக் கொடிகளைப் பயன்படுத்துவதில் எந்தத் தடையும் இல்லை காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்தாண்டு தொடக்கத்தில் வயநாட்டில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ராகுல் காந்தி நடத்திய பேரணியின்போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் கொடிகளைப் பயன்படுத்தவில்லை. இதனால் கட்சி பயப்படுவதாக சிபிஐ(எம்) குற்றம்சாட்டியதால் இந்த முடிவு தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னதாக கடந்த 2019 மலை மாவட்டத்தில் நிகழ்த்திய தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் கூட்டணிக் கட்சியான ஐயுஎம்எல்-யின் பச்சைக் கொடிகள் அக்கட்சியின் கொடிகளின் எண்ணிக்கை விட அதிகமாக இருந்தன. மேலும் பேரணி இந்தியாவிலா அல்லது பாகிஸ்தானிலா என்பதைக் கண்டறிவது கடினமாக உள்ளதாக பாஜக மூத்த தலைவர் அமித் ஷா விமர்சித்திருந்தார்.

பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக புதன்கிழமை நடைபெறும் பேரணியில், கொடிகளைப் பயன்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்று கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

காலை 11 மணிக்கு கல்பெட்டாவில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ நீளமுள்ள சாலை பேரணி நடத்தப்படுகிறது. அதற்கு பிரியங்கா, எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களும் தலைமை தாங்குவார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரும் கலந்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரணிக்குப் பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

வயநாடு மக்கள் என் இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு எனது சகோதரி பிரியங்கா காந்தியை விட சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT