முகப்பு
இந்தியா

நாக்பூரில் ஷாலிமர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன

நாக்பூரில் ஷாலிமர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு நிலவியது.

Updated On : 22 அக்டோபர், 2024 at 12:12 PM
Photo Credit: ANI
பகிர்:

நாக்பூரில் ஷாலிமர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு நிலவியது.

மகாராஷ்டிர மாநிலம், கலாம்னா ரயில் நிலையம் அருகே சிஎஸ்எம்டி ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 2 மற்றும் ஒரு பார்சல் பெட்டி என இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது பெரிய காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

டானா புயல்: மேற்கு வங்க பள்ளிகளுக்கு அக். 26 வரை விடுமுறை!

இருப்பினும், பயணிகள் தங்களது சொந்த இடத்துக்கு செல்ல அனைத்து முயற்சிகளையும் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பாக அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டதோடு பயணிகளுக்கு அடிப்படை வசதிகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மற்றொரு புறம் சீரமைப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. முன்னதாக அக்டோபர் 9 ஆம் தேதி, கல்யாண் ரயில் நிலையத்தில் உள்ளூர் ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →