இந்தியா

அஸ்ஸாமில் அரசுத் தேர்வால் இணைய சேவை முடக்கம்!

அக். 27 ஆம் தேதியில் மாநிலம் முழுவதும் இணையச் சேவை முடுக்கப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

Sakthivel

அஸ்ஸாமில் நடைபெறவுள்ள அரசுத் தேர்வையொட்டி, அக். 27 ஆம் தேதியில் மாநிலம் முழுவதும் இணையச் சேவை முடுக்கப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அஸ்ஸாமில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் (அக். 27) 28 மாவட்டங்களில் கிரேட் 4 பதவிகளுக்கான தேர்வை இரண்டு வேளைகளில் நடைபெறவுள்ளது.

1,484 மையங்களில் காலை 9 மணி முதல் 11.30 மணிவரையில் ஹெச்.எஸ்.எல்.சி. பதவிகளுக்கான தேர்வு நடைபெறும்; இந்த தேர்வுக்கு 8,27,130 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, 808 மையங்களில் பிற்பகல் 1.30 மணி முதல் 4 மணிவரையில் எட்டாம் நிலை பதவிகளுக்கான தேர்வு நடைபெறும்; இந்த தேர்வுக்கு 5,52,002 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், தேர்வு எழுதவிருப்பவர்கள் எந்தவிதமான ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 4 மணிவரையில் அனைத்து வகையான இணைய சேவைகளும் முடுக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தேர்வு மையங்களில் மொபைல் போன் போன்ற சாதனங்களில் இணைய சேவை மூலம் நியாயமற்ற முறையில் தேர்வில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுபவர்களைத் தடுக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

SCROLL FOR NEXT