காங்கிரஸ் 
இந்தியா

மகாராஷ்டிர தேர்தல்: காங்கிரஸின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மகாராஷ்டிர மாநில பேரவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.

DIN

மகாராஷ்டிர மாநில பேரவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி ஆலோசனை மேற்கொண்டதையடுத்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 23 பெயர்கள் அடங்கிய வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளன.

இத்துடன் இதுவரை மொத்தம் 71 வேட்பாளர்களைக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மீதமுள்ள தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி விரைவிலேயே அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தனது முதல் பட்டியலில் 48 வேட்பாளர்களை கடந்த அக். 24ம் தேதி அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே கவிதை, ஏழாண்டுகள் சிறை! - கவிதைதான் குற்றம் - 3

288 பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி ஒரேகட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி தொகுதிப் பங்கீடு ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, காங்கிரஸ், சிவசேனை (யுபிடி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய 3 கட்சிகளும் தலா 85 இடங்களில் போட்டியிடும் என்றும் மீதமுள்ள 23 இடங்களில் அந்தந்த கட்சி வேட்பாளர்கள் பட்டியலின் அடிப்படையில் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரை புயல்... அபர்ணா தீக்‌ஷித்!

தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

SCROLL FOR NEXT