முகப்பு
இந்தியா

மெட்ரோ கட்டுமானப் பணியில் விபத்து: பிகார் தொழிலாளர்கள் 2 பேர் பலி

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு..

Updated On : 29 அக்டோபர், 2024 at 10:14 AM
பகிர்:

பாட்னா: மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக பிகார் காவல்துறை தெரிவித்துள்ளது.

பிகார் தலைநகர் பாட்னாவில் மெட்ரோ ரயில் வழிப்பாதைக்கான சுரங்க கட்டுமானப் பணி நடைபெறுகிறது. இந்த நிலையில், சுரங்க கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்பட்ட இயந்திரம் நேற்று(அக்.28) இரவு பழுதாகி விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும், 2 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.