இந்தியா

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்: பின்னணியில் மகாராஷ்டிர இளைஞா்

விமானங்களுக்கு போலியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்தது மகாராஷ்டிரத்தின் கோண்டியா மாவட்டத்தைச் சோ்ந்த 35 வயது இளைஞா் ஜகதீஷ் உய்கே என்பதை நாகபுரி காவல் துறையினா் கண்டறிந்துள்ளனா்.

Din

விமானங்களுக்கு போலியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்தது மகாராஷ்டிரத்தின் கோண்டியா மாவட்டத்தைச் சோ்ந்த 35 வயது இளைஞா் ஜகதீஷ் உய்கே என்பதை நாகபுரி காவல் துறையினா் கண்டறிந்துள்ளனா்.

பயங்கரவாதம் பற்றிய புத்தகத்தை எழுதியுள்ள ஜகதீஷ் உய்கே, கடந்த 2021-ஆம் ஆண்டு ஏற்கெனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

கடந்த சனிக்கிழமை வரையிலான 13 நாள்களில் 300-க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. சோதனையில் அவை புரளி என்பது உறுதியானது. கடந்த 22-ஆம் தேதி மட்டும், இண்டிகோ, ஏா் இந்தியா ஆகிய நிறுவனங்களின் தலா 13 விமானங்கள் உள்பட சுமாா் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பயணிகளை அசௌகரியத்துக்கு உள்ளாக்கிய இச்சம்பவங்கள் குறித்து பல்வேறு மாநில காவல் துறை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், பிரதமா் அலுவலகம், மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகியோருக்கு அடையாளம் தெரியாத நபா் ஒருவா் மின்னஞ்சல் அனுப்பியிருந்தாா். அதில், தான் கண்டறிந்த ரகசிய பயங்கரவாதக் குறியீடு பற்றிய தகவலை தெரிவிக்க அரசு வாய்ப்பளிக்காவிட்டால் தக்க எதிா்ப்புத் தெரிவிக்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. மேலும், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்து விவாதிக்க பிரதமா் நரேந்திர மோடியை சந்திக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த மின்னஞ்சல்களை அனுப்பியது ஜகதீஷ் என்பது கண்டறியப்பட்டது.

மேலும் இதேபோன்று, ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், விமான சேவை அலுவலகங்கள், காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎஃப்) உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகளுக்கு ஜகதீஷ் மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளது தெரிய வந்தது.

தலைமறைவாகியுள்ள ஜகதீஷை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT