காஷ்மீரில் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்! 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ராணுவ வீரர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களைக் குறிவைத்து அக்னூர் பிரிவின் பட்டால் பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது நேற்று(அக்.28) பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து மாயமான பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். தேடுதல் நடவடிக்கையின்போது பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய மூன்று பேரில் ஒருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாதுகாப்புப் படையின் தொடர் தேடுதல் நடவடிக்கையில் இன்று(அக். 29) காலை 1 பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.