முகப்பு
இந்தியா

ஜாமீன் உத்தரவு பிறப்பித்த 6 மாதத்துக்குப் பிறகு பிணையப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு கூற முடியாது: உச்சநீதிமன்றம்

‘வழக்கில் ஜாமீன் உத்தரவு பிறப்பித்த 6 மாதத்துக்குப் பிறகு பிணையப் பத்திரம் சமா்ப்பிக்குமாறு குற்றச்சாட்டுக்கு உள்ளானவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 9:20 PM
உச்சநீதிமன்றம்
பகிர்:

‘வழக்கில் ஜாமீன் உத்தரவு பிறப்பித்த 6 மாதத்துக்குப் பிறகு பிணையப் பத்திரம் சமா்ப்பிக்குமாறு குற்றச்சாட்டுக்கு உள்ளானவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

பிகாா் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பாட்னா உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட பின்னரும் சிறையிலிருந்து விடுவிக்கப்படாத நிலையில், 6 மாதத்துக்கு பிறகு இரு உத்தரவாதங்களுடன் தலா ரூ. 10,000-க்கான பிணையப் பத்திரங்களைச் சமா்ப்பிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து அந்த நபா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது,.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெலா எம்.திரிவேதி, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வில் கடந்த 24-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த வழக்கில் குற்றவாளிக்கான தகுதி அம்சங்கள் எதையும் பரிசீலிக்காமல் உயா்நீதிமன்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பின்னா், அந்த உத்தரவை 6 மாத காலத்துக்கு ஒத்திவைத்த உயா்நீதிமன்றம், அதற்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை. இந்தச் சூழலில், ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட 6 மாத காலத்துக்குப் பிறகு, பிணைய பத்திரம் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு உத்தரவிட முடியாது’ என்று குறிப்பிட்டு, உயா்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →